இந்தியாவில் கிடுகிடுவென உயரும் தினசரி கொரோனா பாதிப்பு...!
Views - 218 Likes - 0 Liked
-
இந்தியாவில் நேற்று முன்தினம் 27,553 பேருக்கும், நேற்று 33,750 கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் இன்று 37,379 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,49,60,261 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் 11,007 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் குணமடைந்தோர் எண்னிக்கை 3,43,06,414 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 124 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,82,017 ஆக உயர்ந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,71,830 ஆக அதிகரித்துள்ளது.இந்தியாவில் இதுவரை 1,892 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்றில் இருந்து 766 பேர் குணமடைந்த நிலையில் 1,126 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அதிகபட்சமாக ஒமைக்ரான் பாதிப்பு பதிவான மாநிலங்கள் விவரம்;-மராட்டியம் - 568, டெல்லி -382, கேரளா - 185, குஜராத் - 152, தமிழகம் -121, ராஜஸ்தான் -174 பேருக்கு பாதிப்பு பதிவாகி உள்ளது.News