" “If opportunity doesn't knock, build a door.”"

செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம்

Views - 227     Likes - 0     Liked


  • திங்கள்சந்தை, 
    கண்டன்விளை அருகே செல்போன் கோபுரம் அமைப்பதை எதிர்த்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். 
    செல்போன் கோபுரம்
    கண்டன்விளை அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செல்போன் கோபுரம் அமைத்து வருகிறது. இதற்கு இந்த பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலையில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் செல்போன் கோபுரம் முன்பு திரண்டனர். அவர்கள் தனியார் செல்போன் நிறுவனத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
    இதுகுறித்து தகவல் அறிந்த இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி, தனிப்பிரிவு ஏட்டு மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
    கதிர் வீச்சு பாதிப்பு
    அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- 
    இங்கு கட்டுமான பணி தொடங்கும்போதே சந்தேகம் ஏற்பட்டதால் என்வென்று கேட்டோம். அப்போது, குடிநீர் தொட்டி கட்டுவதாக கூறினர். ஆனால், திடீரென செல்போன் கோபுரம் எழுப்பி உள்ளனர்.  குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைந்தால் கதிர் வீச்சினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தனியார் நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை கைவிடா விட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும், என்றனர்.
    தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில், இந்த பிரச்சினை தொடர்பாக மாவட்ட கலெக்டர், தமிழக முதல்-அமைச்சர், மத்திய மந்திரி ஆகியோருக்கு கோரிக்கை மனு கொடுக்க போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக பா.ஜனதா மாவட்ட மகளிரணி செயலாளர் பிரியா சதீஷ், குருந்தன்கோடு ஒன்றிய அ.தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் விஷ்ணு, மடவிளாகம் ஊர்தலைவர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    News