பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்
Views - 204 Likes - 0 Liked
-
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கிடையில், 2022-2023 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பட்ஜெட் கூட்ட தொடரானது இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரானது ஜனவரி 31 ஆம் தேதியிலிருந்து பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்ட கூட்டத் தொடரானது மார்ச் 11-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுளது.இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நெருங்கி வரும் சூழ்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.News