ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதல்
Views - 216 Likes - 0 Liked
-
ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படை கப்பல் மீனவர்களின் ஒரு விசைப்படகு மீது மோதியது. இதில், மீனவர்களின் விசைப்படகு கடலில் மூழ்கியது. இதனால், விசைப்படகில் இருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேர் கடலில் குதித்து தத்தளித்தனர்.விசைப்படகு மீது மோதிய இலங்கை கடற்படை கப்பல் அந்த பகுதியில் இருந்து நகர்ந்து சென்றது. இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் கடலில் விழுந்து தத்தளித்த 5 மீனவர்களையும் அப்பகுதியில் மீன்படித்துக்கொண்டிருந்த சக ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்டனர்.மீட்கபட்ட 5 மீனவர்களும் கரைக்கு அழைத்து வரப்பட்டதனர். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.News