உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியல் வெளியீடு
Views - 271 Likes - 0 Liked
-
உலக டேபிள் டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசைப்பட்டியலை சர்வதேச டேபிள் டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா-அர்ச்சனா காமத் இணை 4 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடியின் சிறந்த தரநிலை இதுவாகும்.இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மணிகா பத்ரா-சத்யன் ஜோடி 4 இடங்கள் ஏற்றம் கண்டு 11-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. இது கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய இணையின் சிறந்த தரநிலையாகும். பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 6 இடம் உயர்ந்து 50-வது இடத்தை பெற்றுள்ளார்.ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர் சத்யன் (சென்னை) 5 இடம் முன்னேற்றம் கண்டு 33-வது இடத்தை பிடித்து இருக்கிறார். மற்றொரு இந்திய வீரர் சரத்கமல் 2 இடம் சறுக்கி 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.News