டெல்லியில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன
Views - 222 Likes - 0 Liked
-
தேசிய தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், டெல்லியில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.டெல்லியில் 9 -12-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. டெல்லியில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.டெல்லி துணை முதல்-மந்திரியும், கல்வி மந்திரியுமான மணீஷ் சிசோடியா, டெல்லி கான்ட் சர்வோதயா கன்யா வித்யாலயாவில் பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார்.News