ஐ.எஸ்.எல் கால்பந்து : அரையிறுதி : ஏ.டி.கே.மோகன் பகான்- ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
Views - 177 Likes - 0 Liked
-
8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.அரைஇறுதியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எதிரான அணியுடன் 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.முதலாவது சுற்றில் கேரளா பிளாஸ்டர்ஸ் 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூருக்கு அதிர்ச்சி அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் நேற்று மீண்டும் இரு அணிகளும் மோதின. நேற்றைய ஆட்டத்தில் கேரளா டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலையில் போட்டி தொடங்கியது.போட்டியின் 18-வது நிமிடத்தில் கேரளா அணியின் லூனா முதல் கோல் அடித்தார். பின்னர் ஜாம்ஷெட்பூர் அணியின் ஹால்டேர் 50-வது நிமிடத்தில் அந்த அணியின் முதல் கோலை அடித்தார்.அதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்காத காரணத்தால் போட்டி சமனில் முடிய முதல் போட்டியில் கேரளா 1 கோல் அடித்து இருந்ததால் அந்த அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.இன்று நடைபெறும் இறுதி அரையிறுதி சுற்றில் ஏ.டி.கே.மோகன் பகான்- ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.ஏற்கனவே நடந்த முதல் சுற்றில் மோகன் பகான் அணியை ,ஹைதராபாத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது குறிப்பிடதக்கது.News