சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீரர் ஸ்ரீகாந்த் திரில் வெற்றி
Views - 197 Likes - 0 Liked
-
சுவிஸ் ஓபன் பேட்மிண்டனில் இன்று நடந்த காலிறுதிக்கு முந்தின சுற்று போட்டி ஒன்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மற்றும் பிரான்ஸ் நாட்டின் கிறிஸ்டோ போபோவ் ஆகியோர் விளையாடினர்.தொடக்கத்தில் சற்று பின்தங்கி இருந்த ஸ்ரீகாந்த், முதல் செட்டை கைப்பற்ற தவறினார். 17 நிமிடங்களில் முதல் செட்டிற்கான போட்டி நிறைவு பெற்றது. 13-21 என்ற புள்ளி கணக்கில் ஸ்ரீகாந்த் பின்தங்கினார்.2வது செட்டை கைப்பற்றும் முனைப்புடன் போட்டி மீண்டும் தொடங்கியது. இந்த முறை காற்று ஸ்ரீகாந்த் பக்கம் வீசியது. கடுமையாக போராடி 25-23 என்ற செட் கணக்கில் 2வது செட்டை தன்வசப்படுத்தினார் ஸ்ரீகாந்த்.இதனால் வெற்றியை முடிவு செய்யும் வகையில் இருவரும், அடுத்த செட்டில் கவனமுடன் விளையாடினர். எனினும், 3வது செட்டில் அதிரடியாக விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றார். 1 மணிநேரம் மற்றும் 13 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் தோல்வியின் விளிம்புக்கு சென்று, அதிலிருந்து பின்னர் மீண்டு ஸ்ரீகாந்த் திரில் வெற்றி பெற்றுள்ளார்.News