" “If opportunity doesn't knock, build a door.”"

தமிழகத்தில் 67% பஸ்கள் ஓடவில்லை - போக்குவரத்துத்துறை

Views - 222     Likes - 0     Liked


  • மத்திய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 
     
    சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன.
     
    நெடுஞ்சாலைகள், போக்குவரத்து, மின்சாரம் போன்ற துறைகளின் தொழிலாளர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
     
    இன்று காலை 6 மணி முதல் 30-ந் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
     
    இந்தநிலையில், 
     
    தமிழகத்தில் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் காரணமாக 67% பஸ்கல் இயங்கவில்லை என போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.   வேலை நிறுத்தம் காரணமாக 32.76% பஸ்கள்  மட்டுமே இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
     
    தமிழகத்தில் காலை 8 மணி நிலவரப்படி 67% பஸ்கள் ஓடவில்லை எனவும்  இயக்கப்பட வேண்டிய 15,335 பஸ்களில் 5,023 பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
     
    எம்டிசி - 318, எஸ் இடிசி - 40, விழுப்புரம் போக்குவரத்து கழகம்  573 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 
     
    சேலம் -445, கோவை - 476, கும்பகோணம் -1705, மதுரை -801, திருநெல்வேலி -665 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
     
    47 எஸ் இ டிசி பஸ்களில் 40 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாக தமிழக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 3,175 சென்னை மாநகர பஸ்களில் 318 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
     
     
    பொது வேலை நிறுத்தம் காரணமாக  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போதுமான பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் உள்ளிட்டோர் அவதிக்குள்ளாகியுள்ளனர். 
     
    அத்துடன் பொது வேலைநிறுத்தத்தால் தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் இயக்கப்படாததால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். 
     
    ஆட்டோ, கார் ஓட்டுநர்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வேலை நிறுத்த போராட்டத்தில் 25 கோடிக்கும் அதிகமான பங்கேற்று உள்ளதாக தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். 
     
    சென்னையில் 90% பேருந்துகள் இயக்கபடாததால் பொதுமக்கள் சென்னை மின்சார ரெயில்களிலும், மெட்ரோ ரெயில்களிலும் பயணம் செய்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. 
    News