கன்னியாகுமரியில்ஒரே நேரத்தில் சூரியன் மறைவு சந்திரன் உதயமாகும் அபூர்வ காட்சி
Views - 197 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி:கன்னியாகுமரியில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு, சந்திரன் உதிக்கும் அபூர்வ காட்சியை நாளை மறுநாள் (சனிக்கிழமை) பார்க்கலாம்.அபூர்வ காட்சிசித்திரை மாதம் வரும் பவுர்ணமி சித்ரா பவுர்ணமி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி நாளை மறுநாள் (சனிக்கிழமை)வருகிறது. அன்று மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி கடலில் சூரியன் மறையும் போது சந்திரன் உதயமாகும். இந்த இரண்டு காட்சிகளும் ஒரே நேரத்தில் நிகழ்கிறது. இது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த அரிய காட்சியை காண கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு பக்கம் அரபிக் கடலில் சூரியன் மறையும் அதே நேரம் கிழக்கு பக்கம் வங்கக்கடலில் சந்திரன் உதயமாகும்.இந்த அபூர்வ காட்சியை கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்திலும், சன்செட் பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் நின்று கொண்டு ரசிக்கலாம்.News