ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை- பஞ்சாப் அணிகள் இன்று மீண்டும் மோதல்
Views - 205 Likes - 0 Liked
-
10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பைமற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப் படும்.இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்றிரவு (திங்கட்கிழமை) நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர்கொள்கிறது. வழக்கத்திற்கு மாறாகதடுமாறிக் கொண்டிருக்கும்சென்னை அணி 7 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 5 தோல்வி என்று 4 புள்ளியுடன்பட்டியலில் 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது.மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி 4 பந்துகளில் டோனி 16 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். இல்லாவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும்.இவ்விரு அணிகளும் இந்த சீசனில் மோதுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே சந்தித்த தொடக்க லீக்கில் பஞ்சாப் 54 ரன்கள் வித்தியாசத்தில் சென்னையை ஊதித் தள்ளியது. அதில் 180 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, சென்னையை 126 ரன்னில் மடக்கியது. அதனால் கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்குவார்கள். அதேசமயம் அந்த தோல்விக்கு பழிதீர்க்க சென்னை அணியினர் வரிந்து கட்டி நிற்பார்கள் என்பதால் ஆட் டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த சில ஆட்டங்களில் நிறைய ரன்கள் குவிக்கப்பட்டு உள்ளன. டெல்லிக்கு எதிராக ராஜஸ்தான் 222 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. எனவே இன்றைய ஆட்டத்திலும் ரன்விருந்தை எதிர்பார்க்கலாம். ஒட்டுமொத்த ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகளும் 26 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 15-ல் சென்னையும், 10-ல் பஞ்சாப்பும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது.அணி பட்டியல் போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-சென்னை:ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னெர் அல்லது மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), டோனி, பிரிட்டோரி யஸ், வெய்ன் பிராவோ, முகேஷ் சவுத்ரி, தீக்ஷனா.பஞ்சாப்:மயங்க் அகர்வால் (கேப்டன்), ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோ அல்லது பானுகா ராஜபக்சே, லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ரபடா, நாதன் எலிஸ் அல்லது ஒடியன் சுமித், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா.இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.News