#லைவ் அப்டேட்ஸ்: கருங்கடலில் ரஷிய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்த உக்ரைன்
Views - 237 Likes - 0 Liked
-
உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-மே 3, 5.00 A.Mமரியுபோல் வெளியேற்றம் இன்றும் தொடரும்: ஜெலென்ஸ்கிமுற்றுகையிடப்பட்ட துறைமுக நகரமான மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை இன்றும் தொடரும் என உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்."மரியுபோலில் இருந்து எங்கள் மக்களை காப்பாற்ற நாங்கள் தொடர்ந்து அனைத்தையும் செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.மே 3, 4.00 A.Mபோர் மூலம் கிழக்கு உக்ரைன் பகுதிகளை இணைக்கவும், தெற்கு நகரமான கெர்சனை சுதந்திரக் குடியரசாக அங்கீகரிக்கவும் ரஷியா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்புக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கார்பென்டர் தெரிவித்துள்ளார்.மே 3, 3.00 A.Mஉக்ரைன் எல்லைக்கு அருகே தென்மேற்கு பகுதியில் பழுதடைந்த பாலத்தை சீரமைக்கும் பணியில் ரஷிய தொழிலாளர்கள் குழு ஈடுபட்டுள்ளது. புதன் கிழமைக்குள் சீரமைப்புப் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.மே 3, 2.00 A.Mஉக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் ரஷிய படைகளின் தாக்குதலை தடுக்கும் முயற்சியாக உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.கீவ்,கருங்கடலில் ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.இருந்தபோதிலும், உக்ரைனை அடிபணிய வைக்கும் ரஷியாவின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. மாறாக உக்ரைனை போலவே ரஷியாவும் இந்த போரில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தி வந்த, ரஷியாவின் மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பலை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி கடலில் மூழ்கடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.ஆனால் அதை மறுத்த ரஷியா, போர்க்கப்பலில் தீப்பற்றி, அதனால் கடலில் மூழ்கியதாக தெரிவித்தது. இதில் ஒரு மாலுமி பலியானதாகவும், 20-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் ரஷிய ராணுவம் தெரிவித்தது. அவர்களின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.இந்த நிலையில் கருங்கடலில் நேற்று ரஷியாவின் 2 ரோந்து கப்பல்களை டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.இது குறித்து உக்ரைன் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி கூறுகையில் “இன்று காலை ஸ்மினி தீவு அருகே கருங்கடலில் ரஷியாவின் ராப்டார் பிரிவு ரோந்து கப்பல்கள் இரண்டை உக்ரைன் வீரர்கள் ‘டிரான்’ மூலம் தாக்கி அழித்தனர்” என்றார்.இதனிடையே கருங்கடலில் ரஷிய கப்பல்கள் டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட வீடியோ ஒன்றை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து ரஷியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.இதற்கிடையில் உக்ரைனின் கிழக்கு பகுதிகளை கைப்பற்றுவதற்கான தாக்குதல்களை ரஷியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது.கிழக்கு பிராந்தியமான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைனின் ‘மிக்29’ ரக போர் விமானத்தை அழித்ததாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.இதுதவிர கிழக்கு உக்ரைனில் உள்ள ராணுவ ஆயுதக் கிடங்குகள், கட்டுப்பாட்டு அறைகள் உள்ளிட்ட 38 இலக்குகளில் தாக்குதல் நடத்தியதாகவும், இரண்டு ஏவுகணைகள், 10 டிரோன்கள் அழிக்கப்பட்டதாகவும் ரஷிய ராணுவம் கூறியுள்ளது.இதனிடையே உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய படைகளால் முற்றுகையிடப்பட்ட அஜோவ் உருக்காலையில் இருந்து பல வாரங்களுக்கு பின்னர் டஜன் கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறினர்.இரு மாதங்களாக தான் சூரிய வெளிச்சத்தைப் பார்க்கவில்லை எனவும், தான் உயிர்பிழைக்க மாட்டேன் என எண்ணியதாகவும், அங்கிருந்து வெளியேறிய பெண் ஒருவர் தெரிவித்தார்.அதிக எண்ணிக்கையிலான மக்கள் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள சாப்போரீஷியா நகருக்கு வந்துகொண்டிருப்பதாக, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். 100 பேர் அடங்கிய முதலாவது குழு சாப்போரீஷியா வந்து சேர்ந்துள்ளதாகவும், அந்த ஆலையில் உள்ள மற்றவர்களையும் வெளியேற்ற ஐ.நா.வுடன் இணைந்து பணியாற்றிவருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்த நிலையில் உக்ரைனின் மெலிடோபோல் நகரில் முற்றுகையிட்டுள்ள ரஷிய வீரர்கள் அந்த நகரில் இருந்து, அறுவடை எந்திரங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை திருடி ரஷியாவின் செச்சினியாவுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரையில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 கோடி) மதிப்பிலான விவசாய உபகரணங்கள் ரஷிய படைகளால் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையில் ரஷியாவில் உக்ரைன் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள பெல்கோரோட் பிராந்தியத்தில் நேற்று காலை அடுத்தடுத்து 2 பயங்கர குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. உக்ரைன் ராணுவம் தங்களது எல்லையோர நகரங்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக ரஷியா அவ்வப்போது குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த இரட்டை குண்டு வெடிப்பு நடந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது.பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சி தொடங்க முடிவு?விரைவில் அறிவிப்பு வெளியாகிறதுபுதுடெல்லி, மே.3-பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், நேரடியாக மக்களை சந்திக்க முடிவு செய்திருப்பதாக அறிவித்து உள்ளார். இதன் மூலம் அவர் அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.பீகாரை சேர்ந்த பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், ‘ஐ-பேக்’ என்ற நிறுவனத்தை தொடங்கி அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்களில் பல்வேறு வியூகங்களை அமைத்து கொடுத்து வருகிறார்.பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை வெற்றி மகுடம் சூட வைத்ததில் இவர் முக்கிய பங்காற்றி இருக்கிறார்.இதற்கிடையே பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியிலும் இணைந்து பணியாற்றினார். அந்த கட்சியில் தேசிய துணைத்தலைவர் பதவியை பெற்றிருந்த அவர், பின்னர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் இருந்து வெளியேறினார்.பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைய விரும்பினார். இதற்காக சோனியா, ராகுல், பிரியங்கா உள்ளிட்ட கட்சியின் மேல்மட்ட தலைவர்களை பலமுறை சந்தித்தார். மேலும் காங்கிரசை பலப்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் கட்சித்தலைமையிடம் சமர்ப்பித்தார்.ஆனால் நீண்ட காலமாக நடந்து வந்த இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பும் ஒப்புக்கொள்ளக்கூடிய முடிவு எட்டப்படவில்லை. இதனால் பிரசாந்த் கிஷோரின் காங்கிரசில் இணையும் கனவு நிறைவேறவில்லை.இந்த நிலையில் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேரடி அரசியலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாக பிரசாந்த் கிஷோர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்களுக்கு ஆதரவான கொள்கைகளை வடிவமைப்பதற்குமான எனது பயணம் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வு மிகுந்ததாக இருந்தது.பிரச்சினைகள் மற்றும் நல்லாட்சிக்கான பாதையை நன்கு புரிந்து கொள்வதற்காக உண்மையான எஜமானர்களாகிய மக்களிடமே செல்லும் நேரம் வந்து விட்டது. அதை பீகாரில் இருந்து தொடங்குகிறேன்.இவ்வாறு அதில் பிரசாந்த் கிஷோர் குறிப்பிட்டு உள்ளார்.இதன் மூலம் அவர் நேரடி அரசியலில் களமிறங்குவதை உறுதி செய்துள்ளார். இதற்காக அவர் அரசியல் கட்சி தொடங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தனது எதிர்கால திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுடன் இந்த வார இறுதியில் அவர் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஐ-பேக் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.News