உலக ஜூனியர் பளுதூக்குதல் போட்டி: இந்திய வீராங்கனைக்கு தங்கம்
Views - 242 Likes - 0 Liked
-
உலக ஜூனியர் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டில் நேற்று தொடங்கியது. இதில் பெண்களுக்கான 45 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஹர்ஷதா ஷரத் காருட் ‘ஸ்னாட்ச்’ முறையில் 70 கிலோவும், ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 83 கிலோவும் என மொத்தம் 153 கிலோ எடை தூக்கி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.இதன் மூலம் அவர் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற 3-வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். துருக்கி வீராங்கனை பெக்டாஸ் கான்சு மொத்தம் 150 கிலோவும், மால்டோவா வீராங்கனை ஹின்சு லுமினிதா 149 கிலோ எடையும் தூக்கி முறையே வெள்ளி, வெண்கலப்பதக்கம் பெற்றனர்.News