எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Views - 186 Likes - 0 Liked
-
சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. * நெல்லூர்-சூலூர்பேட்டை இடையே காலை 10.15 மணிக்கும், சூலூர்பேட்டை-நெல்லூர் இடையே காலை 7.50 மணிக்கும், சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-சூலூர்பேட்டை இடையே காலை 5.20 மணிக்கும், சூலூர்பேட்டை-சென்டிரல் இடையே மதியம் 12.35 மணிக்கும், ஆவடி-சென்டிரல் இடையே காலை 4.25 மணிக்கும் இயக்கப்படும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. * திருப்பதி-சென்டிரல் (வண்டி எண்:16054) இடையே காலை 10.10 மணிக்கும், எம்.ஜி.ஆர் சென்டிரல்-திருப்பதி (16053) இடையே மதியம் 2.15 மணிக்கும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 24, 25, 31-ந்தேதி, ஜூன் மாதம் 1,7,8-ந்தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. * விஜயவாடா-சென்டிரல் (12711) இடையே காலை 6.10 மணிக்கு இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி கூடூர்-சென்டிரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக சென்டிரல்-விஜயவாடா (12712) இடையே மதியம் 2.10 மணிக்கு புறப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 24-ந்தேதி சென்டிரல்-கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் கூடூரிலிருந்து மாலை 4.20 மணிக்கு இயக்கப்படும்.
www.kumarinet.comNews