துரிதமாக ரத்தம் வழங்கும் திட்டம்; கமல்ஹாசன் இன்று தொடங்கி வைக்கிறார்
Views - 186 Likes - 0 Liked
-
தமிழகம் முழுவதும் உள்ள நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து துரிதமாக ரத்தம் வழங்கும் புதிய திட்டத்தை இன்று கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு நாளை (14-ந்தேதி) மக்கள் நீதி மய்யம் சார்பாக, கடந்த 40 ஆண்டு காலமாக தமிழகம் முழுவதும் ஆங்காங்கே ரத்த தானம் வழங்கும் நற்பணி இயக்க நண்பர்களை ஒருங்கிணைத்து, உதவி தேவைப்படுவோருக்கு துரிதமாக ரத்தம் வழங்கும் வகையில் கமல்ஸ் பிளட் கம்யூனி என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட விருக்கிறது. அதன் தொடக்க விழா இன்று (13-ந்தேதி) காலை 11 மணியளவில், கட்சியின் தலைமை அலுவலகத்தில், தலைவர் கமல்ஹாசன் தொடங்கி வைக்கிறார். விழாவில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.
News