தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
Views - 222 Likes - 0 Liked
-
தமிழகம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகாவில் மழை வெளுத்து வாங்குகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழையானது பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் மூன்று மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
News