பள்ளி வாகனங்களில் கேமரா கட்டாயம் - தமிழக அரசு உத்தரவு
Views - 491 Likes - 0 Liked
-
பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கேமராவும், பின்பகுதியில் சென்சார் கருவியும் கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள் விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில், அனைத்து பள்ளி பஸ்களிலும் கேமரா, சென்சார் பொருத்துவதை கட்டாயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டது அதன் தொடர்ச்சியாக மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கான வரைவு, கடந்த ஜூன் 29-ம்தேதி உள்துறைச் செயலரால் அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தொடர்பான உத்தரவை வெளியிட அரசின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த உத்தரவு தற்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
News