பாலப்பள்ளத்தில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் அமைக்கும் பணி தீவிரம்
Views - 76 Likes - 0 Liked
-
பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி சார்பில் 19–வது ஆண்டாக அதி நவீன தொழில் நுட்பத்துடன் 90 அடி நீளத்தில் 50 அடி உயரத்தில் பிரமாண்ட கிறிஸ்துமஸ் குடில் கண்காட்சி அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த குடில் நியூசிலாந்தில் உள்ள ஹெலிவா பேலஸ் வடிவில் தயாராகி வருகிறது. இந்த பணி முடிவடைந்ததும் வருகிற 23–ந் தேதி கிறிஸ்துமஸ் குடில் திறக்கப்படுகிறது. இந்த குடிலை ஜனவரி 1–ந் தேதி வரை மக்கள் கண்டுகளிக்கலாம். குடிலின் உள்ளமைப்பில் பைபிளில் கூறப்பட்டுள்ள கருத்தான மோட்சம், நரகம் பற்றிய காட்சிகள் தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கிறிஸ்துமஸ் குடில் தருவை புற்களால் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாலப்பள்ளம் வின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ஜீவன் சேரிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.News