வெளிநாட்டு தலைவர்கள் இரங்கல் ‘தமிழ் மக்களின் இதயம் கவர்ந்த தலைவர்’ என புகழாரம்
Views - 56 Likes - 0 Liked
-
ஜெயலலிதா மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல் தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர், ‘‘தனது மக்களால் நேசிக்கப்பட்ட மகத்தான தலைவர் ஜெயலலிதா. அவரது அன்புக்குரியவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள்’’ என தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் ராஜபக்சே, ‘‘தமிழ் மக்களின் இதயங்களை கவர்ந்த தலைவர் ஜெயலலிதா’’ என புகழாரம் சூட்டி உள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்டு வர்மா, ‘‘தமிழ்நாட்டுக்கு ஆற்றிய சேவைகளால் ஜெயலலிதா என்றைக்கும் நினைவுகூரப்படுவார். அவரது மறைவுக்கு அமெரிக்காவின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கல்கள்’’ என கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு சிங்கப்பூர் அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.
அந்த நாட்டின் சார்பில் வெளியுறவு மந்திரி விவியன் பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் சென்னைக்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மலேசிய செனட்டின் தலைவர் விக்னேஸ்வரனும் ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், ‘‘நான் மிகுந்த வருத்தத்தில் உள்ளேன். ஜெயலலிதாவை நாங்கள் நன்றாக அறிவோம். தமிழ்நாடு அமைதி காக்கும் என நம்புகிறேன்’’ என கூறி உள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் தமிழ் அமைப்புகள் சார்பில் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அவை, ‘‘ஜெயலலிதா உலகமெங்கும் உள்ள தமிழ் இனத்தின் தோழி’’ என அவை புகழாரம் சூட்டின.News