குமரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்– முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
Views - 36 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் மற்றும் முழு உருவச்சிலை அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிர்வாகிகள் கூட்டம்
குமரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் விஜயகுமார் எம்.பி. தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாஞ்சில் சந்திரன் வரவேற்று பேசினார். மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன், இணைச் செயலாளர் மேரிகமலாபாய், துணை செயலாளர் வக்கீல் ஞானசேகர், ஒன்றிய செயலாளர்கள் பாலகிருஷ்ணன், தாணுபிள்ளை மற்றும் முகமதுதாசிம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் ஸ்ரீஅய்யப்பன் நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
கூட்டத்தில், மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வது, அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்கு முழு உருவச்சிலையுடன் நினைவு மண்டபமும், முழு உருவச்சிலையும் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக கூட்டத்தில், ஜெயலலிதா மறைவுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.News