கார்த்திகை தீப திருவிழா யானை மீது அம்மன் பவனி
Views - 39 Likes - 0 Liked
-
அருமனையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாளில் கணபதிஹோமம், நாகரூட்டு பஜனை, திருவிளக்கு பூஜை போன்றவை நடந்தன. 2-வது நாளில் காலையில் சிறப்பு பூஜை, மாலையில் புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெற்றன. விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் யானைமேல் அம்மன் எழுந்தருளி பவனி நடந்தது. பவனியானது கோவிலில் இருந்து தொடங்கி மானாங்காணி, சானல்கரை, குஞ்சாலுவிளை, மேலத்தெரு, நெடியசாலை வழியாக கோவிலை சென்றடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
News