நாகர்கோவில் அருகே மனுநீதி முகாமில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்
Views - 38 Likes - 0 Liked
-
நாகர்கோவில் அருகே நடந்த இரண்டாம் கட்ட மனுநீதி முகாமில் 34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.
45 கோரிக்கை மனுக்கள்
அகஸ்தீஸ்வரம் தாலுகா தேரேகால்புதூர் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட கோதை கிராமம் அரசு தொடக்கப்பள்ளியில் கலெக்டரின் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாமின் நிறைவுநாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் தலைமை தாங்கினார். கடந்த மாதம் நடைபெற்ற முதற்கட்ட முகாமில் 45 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 12 தகுதியான மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த மனுக்கள் மீதான பதில்களை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளால் பொது மக்களுக்கு பதில்கள் தெரிவிக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து, வருவாய்த்துறை சமூகபாதுகாப்பு திட்டத்தின்கீழ் இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை என மொத்தம் 15 பேருக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000 உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 18 பயனாளிகளுக்கு புதிய ரேஷன் கார்டுகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஒரு பயனாளிக்கு இலவச ‘இஸ்திரி‘ பெட்டி என மொத்தம் 34 பயனாளிகளுக்கு தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வழங்கினார்.
மேலும் சுகாதாரத்துறை, தோட்டக்கலை துறை மற்றும் வேளாண்மை துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் கலெக்டர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் கோட்டாட்சியர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நிஜாமுதீன், இணை இயக்குநர் (வேளாண்மைதுறை) இளங்கோ, சமூக பாதுகாப்புத்திட்டம் தனி துணை கலெக்டர் சந்திரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சிவதாஸ், துணை இயக்குநர் (தோட்டக்கலைத்துறை) அசோக் மேக்ரின், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அருளரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.News