சட்டவிதிகளுக்கு உட்பட்டு சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்து எடுத்து உள்ளோம்- பன்னீர் செல்வம் பேட்டி
Views - 40 Likes - 0 Liked
-
அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் பதவி காலியாக உள்ளது. இந்த பொறுப்புக்கு ஜெயலலிதா வின் தோழி சசிகலா வர வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகளும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து அணி நிர்வாகிகளும் ஒட்டு மொத்தமாக வலியுறுத்தி னார்கள்.
அவர்கள் போயஸ் கார்டன் சென்று சசிகலாவை நேரில் சந்தித்து வலியுறுத் தினார்கள். மாவட்ட செய லாளர்கள், அணி நிர்வாகி கள் கூட்டம் நடத்தி சசிகலா பொது
இந்த நிலையில் ஆண் டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் என்பது தேர்தல் கமிஷன் விதி. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க.வின் அவசர பொதுக்குழு கூட்டப்படுவ தாகவும் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில் கூட்டம் நடை பெறும் என்றும் அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவித் தது.
இதையட்டி பொதுக் குழு உறுப்பினர்கள் 2,770 பேருக்கும் முறைப்படி அழைப்பு அனுப்பப்பட்டது. வெளியூர்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நேற்று இரவே சென்னை வந்து விட்டனர். இன்று காலை முதல் அவர்கள் பொதுக்குழு நடைபெறும் வானகரம் ஸ்ரீவாரு மண் டபத்துக்கு வரத் தொடங் கினர்.
காலை 9.30 மணிக்கு பொதுக்குழு கூடியது. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார்.
முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. பொருளாளரு மான ஓ.பன்னீர்செல்வம், அமைப்பு செயலாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள், அமைச் சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, நகர பேரூர் கழக செயலாளர்கள், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, டெல்லி உள்ளிட்ட வெளி மாநில அ.தி.மு.க. நிர்வாகிகளும் பொதுக்குழுவில் கலந்து கொண்டனர்.
முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் மூத்த நிர்வாகிகள் சிலர் பொதுக்குழுவில் உரையாற் றினார்கள். அதன்பிறகு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெய லலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும், அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கு வதுடன் பாராளு மன்ற வளாகத்தில் சிலை நிறுவ வேண்டும். உலக அமைதிக்கான நோபல் பரிசு, மகசேசே விருது வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலாவை தேர்வு செய்தும், அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்பை சசிகலாவிடம் ஒப்படைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க கோரி தீர்மானம் நிறைவேற்ற பட்டது
* ஜெயலலிதா மறைவின் போது சட்டம்- ஒழுங்கை காக்க உதவிய மத்திய அரசுக்கு நன்றி
* நாடாளுமன்றத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலையை நிறுவ மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம்
பொதுக்கூழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த முதல்வர் ஓ. பன்னீர் செல்வம்
அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று இருக்கிறது. கழக சட்ட திட்ட விதிகளுக்கு உட்பட்டு கழக பொதுச்செயலாளராக சின்னம்மா நியமிக்கப்பட்டுள் ளார். அதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த தகவலை சின்னம்மா விடம் தெரிவித்து அவரது சம்மதம் பெற செல்கிறோம்.
இவ்வாறு அவர் கூறி னார்.News