குமரி மாவட்ட ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு அனுப்பும் பணி தீவிரம்
Views - 41 Likes - 0 Liked
-
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வருகிற 14–ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை, காவலர் குடும்ப அட்டை மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்புத்துண்டு ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.
அதன்படி, குமரி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பொங்கல் பரிசு தொகுப்புக்கு தேவையான பொருட்கள் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிட்டங்கிக்கு வந்துள்ளன. இந்த பொருட்களை பார்சல் செய்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்று ஏராளமான கரும்பு கட்டுகள் வந்தன. அந்த கரும்பு கட்டுகள் லாரிகளில் ஏற்றப்பட்டு அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி மும்முரமாக நடந்தது.News