கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நவீன படகுகள் மூலம் கண்காணிப்பு
Views - 40 Likes - 0 Liked
-
மும்பையில் கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பிறகு கடலோர பாதுகாப்பை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கன்னியாகுமரி கடல் பகுதியில் நேற்று ‘சஜக்‘ ஆபரேஷன் மூலம் கண்காணிப்பு பணி நடந்தது.
கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஜான் கிங்சிலி கிறிஸ்டோபர் தலைமையில் சப்–இன்பெக்டர்கள் நாகராஜன், ஜேசுராஜ், மணிகண்டன், ஏட்டுகள் நீலமணி, தாஸ், அனில்குமார், விஜயகுமார் ஆகியோர் 4 நவீன ரோந்து படகுகள் மூலம் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
தீவிர கண்காணிப்பு
நேற்று காலை 6 மணிக்கு சின்னமுட்டத்தில் இருந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் –கூடங்குளம், சின்னமுட்டம்–உவரி, சின்னமுட்டம்–நீரோடி வரை இந்த கண்காணிப்பு பணி நடைபெற்றது.
கடல் வழியாக மர்ம படகுகள் ஊடுருவுகிறதா?, போதைப்பொருள் கடத்தப்படுகிறதா? என்பன போன்ற குற்ற சம்பவங்கள் நடக்கிறதா? என்பதை நவீன படகில் சென்று பைனாகுலர்கள் மூலம் போலீசார் கண்காணித்தனர். இதேபோல் மீனவர்களின் படகும் சோதனை செய்யப்பட்டது. குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.News