மாணவர்கள் போராட்டம் தீவிரம்
Views - 43 Likes - 0 Liked
-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து, கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் தொடங்கிய போராட்டம் விடிய விடிய நடைபெற்றதோடு, நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. இதில், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு எங்களது உரிமை. அதை விட்டு கொடுக்கப்போவதில்லை. சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் போராட்டம் தொடரும் வரை எங்களது போராட்டமும் ஓயாது. போராட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்றனர். இதேபோல், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பும் இரண்டாவது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் கைகளில், பீட்டாவை தடை செய்ய கோரியும், மத்திய, மாநில அரசை கண்டித்தும், ஜல்லிக்கட்டு தமிழரின் உரிமை என்பன போன்ற உணர்வுப்பூர்வமான வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News