அலங்காநல்லூரில் பிப்ரவரி 1-ந்தேதி ஜல்லிக்கட்டு போட்டி ஊர் பொதுமக்கள் முடிவு
Views - 49 Likes - 0 Liked
-
அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள், கிராம மக்கள் தொடர்ந்து இன்று 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்களி டம் போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இன்று 11-வது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அரசு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் அவசர சட்டம் குறித்து விவாதிக்கவும், போராட்டத்தை தொடருவதா? அல்லது கைவிடுவதா? என்பது குறித்தும் ஆலோசனை நடத்த இன்று அலங்காநல்லூரில் ஊர் கமிட்டி மற்றும் விழாக்கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பிப்ரவரி 1-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கபட்டது. ஜல்லிக்கட்டை பார்க்க மாணவர்களுக்கு என்று தனி கேலரி ஏற்படுத்தி தரப்படும் என ஊர்கமிட்டி தெரிவித்து உள்ளது.News