தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் திடீர் பதவி விலகல் அரசு வட்டாரத்தில் பரபரப்பு
Views - 38 Likes - 0 Liked
-
கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தமிழக அரசுத் துறைகளில் முக்கிய பணியாற்றி வந்தார். இவரது கணவர் பாலகிருஷ்ணனும் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.1940–ம் ஆண்டில் இருந்து இதுவரை தமிழகத்தின் தலைமைச்செயலாளர் பதவி வரை வந்த பெண்களில் ஷீலா பாலகிருஷ்ணன் 3–வதாக உள்ளார்.மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் சிந்தனைக்கு ஏற்ப செயல்படும் தலைமைச் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் விளங்கினார். அவர் கடந்த 2014–ம் ஆண்டு மார்ச் 31–ந்தேதி பணியில் இருந்து ஓய்வுபெற்றார். ஆனால் மறுநாளில் (1.4.2016) இருந்து அவர் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.திடீர் விலகல்ஒவ்வொரு ஆண்டும் பதவி நீடிப்பை பெற்று வந்த அவர், 2 ஆண்டுகள் 9 மாதங்கள் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் ஷீலா பாலகிருஷ்ணன், திடீரென்று பதவி விலகுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.தான் பதவி விலக முடிவு செய்ததுபற்றி சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் ஷீலா பாலகிருஷ்ணன் கூறியதாக அரசு வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.News