பாராளுமன்றத்தில் அ.தி.மு.க எம்.பிக்கள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
Views - 38 Likes - 0 Liked
-
அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலாவை கடந்த 5-ந்தேதி எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இது தொடர்பான ஆவணங்கள் கவர்ன்ர் வித்த்யாசாகர் ராவிடம் அளிக்கபட்டு ஆட்சி அமைக்க உரிமை கோரபட்டது. ஆனால் கவர்னரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
இந்த் நிலையில் இன்று பாராளுமன்றம் கூடியதும் இரு அவைகளிலும் அ.தி.மு.க எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அ. தி.மு.க பதவி ஏற்பதில் கவர்னர் காலதாமத படுத்துவதாக கோஷம் எழுப்பினர்.அ.தி.மு.க எம்.பி.க்களின் அமளியில் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கபட்டது.News