பரபரப்பான சூழ்நிலையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் முக்கிய ஆலோசனை
Views - 37 Likes - 0 Liked
-
அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக கடந்த 5-ம் தேதி சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். 7 அல்லது 9-ம் தேதி அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த 7-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாகவும், ராஜினாமாவை திரும்பப் பெறப்போவதாகவும் அறிவித்தார்.
அ.தி.மு.க.வில் யாருக்கு செல்வாக்கு அதிகம்? என்பதில் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கும், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.
இருவரும் ஆதரவாளர்களை திரட்டும் நடவடிக்கையிலும், ஆட்சி அமைக்கும் முயற்சியிலும் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். இது தொடர்பாக இருவரும் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினார்கள். இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி ஆளுநரை சந்தித்த ஓபிஎஸ், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். அதே நாளில் ஆளுநரை சந்தித்த சசிகலா, பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்ப தால் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றார். இரு வரின் கோரிக்கையையும் கேட்டுக் கொண்ட ஆளுநர், இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று முதல் -அமைச்சர் பன்னீர் செல்வம் தலைமை செயலகம் வரபோவதாக தகவல் வெலீயாகி உள்ளது. இதை தொடர்ந்து தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் இன்று அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசானையில் ஈடுபட்டார். டிஜிபி ராஜேந்திரன் , சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.News