பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும்" : தமிழக அரசு
Views - 37 Likes - 0 Liked
-
பொது விநியோக திட்டத்தின் கீழ் பருப்பு, பாமாயில் தொடர்ந்து வழங்கப்படும் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ், பொது வினியோக திட்டம் குறித்து உண்மைக்கு புறம்பான வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும், விலையில்லா அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்கள் விருப்பத்தின் பேரிலேயே அரிசிக்கு பதில் கோதுமை வழங்கப்படுதாகவும் கூறினார். மேலும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும் எனவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.News