சென்னை துறைமுகத்துக்கு வருகை: ‘ஐ.சி.ஜி.எஸ். ஷானாக்’ ரோந்து கப்பலுக்கு வரவேற்பு
Views - 33 Likes - 0 Liked
-
105 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரோந்து கப்பல் மணிக்கு 23 நாட்டிக்கல் தூர வேகத்தில் செல்ல கூடியது. இந்த புதிய ரோந்து கப்பல் விசாகப்பட்டினத்தை மையமாக கொண்ட கிழக்கு பிராந்திய கடற்படையுடன் இணைக்கப்பட்டு உள்ளது.
கடலோர காவல் குழுமம் சார்பில் இந்த ரோந்து கப்பலுக்கான வரவேற்பு விழா நேற்று சென்னை துறைமுகத்தில் நடந்தது. இதற்காக ‘ஐ.சி.ஜி.எஸ். ஷானாக்’ ரோந்து கப்பல் நேற்று காலை 9 மணிக்கு துறைமுகம் வந்தடைந்தது. கடலோர காவல் குழும கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த விழாவுக்கு தலைமை தாங்கினார்.
‘ஐ.சி.ஜி.எஸ். ஷானாக்’ ரோந்து கப்பலில் கமாண்டராக டி.ஐ.ஜி. சசிகுமார் உள்ளார். இதுதவிர 14 அதிகாரிகள், 98 பணியாளர்கள் உள்ளனர். இந்திய கடலோர காவல்படையினரின் பலதரப்பட்ட கடல் வழி பணிகளில் இந்த ரோந்து கப்பல் ஈடுபட உள்ளது. கடலோர பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யவும், தீவிர கண்காணிப்பு பணியிலும் இந்த ரோந்து கப்பல் ஈடுபட இருக்கிறது. இந்த ரோந்து கப்பலை கடந்த மாதம் 21–ந்தேதி கோவாவில் வைத்து மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ்பிரபு ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
News