" “The best preparation for tomorrow is doing your best today.”"

மருத்துவ மாணவர்கள் போராட்டம் தொடர்பான வழக்கு தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு

Views - 46     Likes - 0     Liked


  • சென்னை ஐகோர்ட்டில் ராயப்பேட்டையை சேர்ந்த சி.குமரன் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவர்கள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக சிகிச்சை பெற முடியாமல் திரும்பி வந்தேன். எனவே அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.
     
    இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், மருத்துவமனைக்கு ஒதுக்கப்படும் நிதி, டாக்டர்களின் எண்ணிக்கை தொடர்பாக 9 கேள்விகளை எழுப்பி, மருத்துவமனை டீன் நேரில் ஆஜராகி பதில் அளிக்க உத்தரவிட்டார். அதன்படி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் கே.நாராயணசாமி நேற்று நீதிபதி என்.கிருபாகரன் முன்பு ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்தார்.
     
    பாதிப்பு இல்லை
     
    அந்த மனுவில் அவர் கூறியதாவது:-
     
    மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் எந்த ஒரு டாக்டரும் பங்கேற்கவில்லை. அன்று அனைத்து டாக்டர்களும், ஊழியர்களும் பணியில் இருந்தனர். மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை. இந்த போராட்டத்தால் மருத்துவமனையின் செயல்பாடுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
     
    மருத்துவ கல்லூரியில் பணியாற்றும் 244 பேராசிரியர்களுக்கு, 225 பேரும், 160 உதவி பேராசிரியர்களுக்கு, 141 பேரும் உள்பட 595 பணியிடங்களுக்கு 540 பேர் பணியில் உள்ளனர். தற்போது 55 பணியிடங்கள் காலியாக உள்ளன. தற்போதைய நிதிநிலை அறிக்கையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மருந்துகள், உபகரணங்கள் வாங்க ரூ.78 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
     
    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
     
    வழக்கு தள்ளிவைப்பு
     
    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மருத்துவமனை டீன் நேரில் ஆஜராகி திருப்தியாக பதிலளித்து உள்ளார். எனவே அடுத்த விசாரணைக்கு அவர் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது எனக்கூறி விசாரணையை ஏப்ரல் 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். 

     

    News