பொற்றையடி ஷீரடி சாய்பாபா கோவில் வருஷாபிஷேக விழா
Views - 50 Likes - 0 Liked
-
கொட்டாரம் அருகே பொற்றையடியில் உள்ள ஸ்ரீ ஷீரடி சாய்பாபா ஆனந்த கோவிலின் 5-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நாளை(7-ந் தேதி) தொடங்குகிறது. நாளை காலை 6.45 மணிக்கு ஆரத்தி, 7.15 மணிக்கு அபிஷேகம், 7.45 மணிக்கு 108 நாமாவளியும் நடக்கிறது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பாபாவின் மூலமந்திர நாம ஜெபம் நடக்கிறது. இதனை ஆந்திர மாநிலம் ஓங்கோலை சேர்ந்த பிரசாத் குழுவினர் நடத்துகிறார்கள்.
8-ந் தேதி காலை 6.45 மணிக்கு ஆரத்தியும், 7 மணிக்கு சங்கல்ப யாகமும், 7.15 மணிக்கு அபிஷேகமும், 7.45 மணிக்கு 108 நாமாவளியும் நடக்கிறது. காலை 9 மணிக்கு கணபதி, தத்தாத்ரேயர், துவாரகமாயி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகமும், பாபாவுக்கு 3006 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் 9 விதமான அபிஷேகமும் நடைபெறுகிறது. தொடர்ந்து கூட்டு பிரார்த்தனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு சமய சொற்பொழிவும், மாலை 4 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மலர் அலங்காரம் பல்லக்கு ஊர்வலமும், 6.30 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது. காலை, மாலை, இரவு அன்னதானம் நடக்கிறது.News