2 லட்சம் மலிவு விலை வீடு கட்டும் திட்டம் தொடங்கியது தமிழ்நாட்டுக்கு ஆயிரம் வீடுகள் ஒதுக்கீடு
Views - 99 Likes - 0 Liked
-
2022–ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்கும் நோக்கத்தில் அனைவருக்கும் வீடு திட்டத்தை மத்திய அரசு 2015–ம் ஆண்டு தொடங்கியது. இதுவரை, ரூ.95 ஆயிரத்து 660 கோடி முதலீட்டில், 17 லட்சத்து 73 ஆயிரம் வீடுகளை கட்டுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில், சுமார் 2 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான 350 திட்டங்களை மத்திய அரசு நேற்று தொடங்கியது. குஜராத் மாநிலம் காந்திநகரில் நடந்த விழாவில், மத்திய மந்திரி வெங்கையா நாயுடு, இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்துக்கு தனது பங்களிப்பாக, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் ரூ.38 ஆயிரம் கோடி வழங்கும். திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் குறைவான வீடுகள் கட்டப்படும். கர்நாடகாவில் 7 ஆயிரத்து 37 வீடுகள் கட்டப்படும்.
News