பெட்ரோல், டீசல் வீட்டுக்கு வந்து வினியோகம் பெட்ரோலிய அமைச்சகம் முடிவு
Views - 45 Likes - 0 Liked
-
எந்தவொரு வாகனம் என்றாலும், அதற்கு பெட்ரோல், டீசல் நிரப்புவதற்கு பெட்ரோல் நிலையங்களுக்கு சென்றுவர வேண்டிய நிலையில் வாடிக்கையாளர்கள் இருந்து வருகின்றனர்.
இதனால் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளர்கள் வரிசையில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் நேரம் வீணாகிறது.
இதையெல்லாம் தவிர்க்கிற விதத்தில், வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து கொண்டால் பெட்ரோல், டீசலை அவர்களின் வீட்டுக்கு வந்து வினியோகம் செய்வதற்கு (தற்போது கியாஸ் சிலிண்டர்கள் சப்ளை செய்வது மாதிரி) மத்திய பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான வழிமுறைகள் பற்றி தற்போது அது ஆராய்ந்து வருகிறது.
நாட்டில் 3½ கோடி வாடிக்கையாளர்களுக்காக 59 ஆயிரத்து 595 பெட்ரோல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கோடிக்கு பெட்ரோல், டீசல் வாங்குவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
News