ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.25
Views - 40 Likes - 0 Liked
-
இந்திய பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் உயர்வுடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ.64.25-ஆக இருந்தது. பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் அமெரிக்க டாலரை விற்பனை செய்து வருவது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த வெள்ளியன்று ரூபாயின் மதிப்பு ரூ.64.38-ஆக இருந்தது.
News