அந்நிய செலாவணி கையிருப்பு 37,571 கோடி டாலராக உயர்வு
Views - 53 Likes - 0 Liked
-
இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு இதுவரை இல்லாத அளவுக்கு 37,571 கோடி டாலராக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த வார (மே 5) முடிவி லிருந்து அந்நிய செலாவணி கையிருப்பு 298.5 கோடி டாலர் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் அந்நிய கரன்சி சொத்துகள் (எப்சிஏ) அதிகரித்ததுதான் என்று ரிசர்வ் வங்கி கூறியிருக்கிறது. கடந்த வார முடிவில் இந்தியாவில் அந்நிய செலாவணி கையிருப்பு 37,273 கோடி டாலராக இருந்தது குறிப்பிடத் தக்கது. அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பதற்கு எப்சிஏ மிக முக்கியமான காரணி. இந்த வாரத்தில் எப்சிஏ 247.4 கோடி டாலர் அதிகரித்து தற்போது 35,153 கோடி டாலராக உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தங்க கையிருப்பு 56,990 கோடி டாலராக அதிகரித்துள்ளது. மேலும் சர்வதேச செலாவணி நிதியத்திட மிருந்து சிறப்பு நிதி பெறும் உரிமை அதிகரித்துள்ளது. சிறப்பு நிதி பெறுவது 4 லட்சம் டாலரிலிருந்து 145.9 கோடி டாலராக அதிகரித் துள்ளதாக ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது.
News