கடந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 3 மடங்கு உயர்வு
Views - 30 Likes - 0 Liked
-
கடந்த மாதத்தில் பெட்ரோலியம், இன்ஜினியரிங், ஜவுளித்துறை ஏற்றுமதி அதிகரித்ததால், நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி மதிப்பு 2,463 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது 19.77 சதவீதம் அதிகரிப்பாகும்.
இதுபோல், இறக்குமதி 49.07 சதவீதம் உயர்ந்து, 3,788 கோடி டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரலில் இது 254 கோடி டாலராக மட்டுமே இருந்தது. குறிப்பாக, தங்கம் இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்து 385 கோடி டாலராக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியும் 30.12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 3 மடங்கு உயர்ந்து 1,324 கோடி டாலராக உள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.News