சர்வதேச பொருளாதார வழித்தட திட்டம்; இந்தியாவின் எதிர்ப்பை சீனா நிராகரித்தது
Views - 46 Likes - 0 Liked
-
இதற்கு சர்வதேச பொருளாதார வழித்தட திட்டம் என்று பெயர். இத்திட்டத்தின் ஒரு பகுதியான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக செல்வதால், அதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், நேற்று முன்தினம் பீஜிங்கில் நடந்த சர்வதேச பொருளாதார வழித்தட மாநாட்டை இந்தியா புறக்கணித்தது.
இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பை சீனா நிராகரித்துள்ளது. இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கூறியதாவது:-
இந்த திட்டத்தை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளும், அமைப்புகளும் ஆதரித்து, இதில் பங்கேற்றுள்ளன. சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம், பொருளாதார ஒத்துழைப்புக்கான திட்டம். காஷ்மீர் பிரச்சினையை இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்பதுதான் சீனாவின் நிலைப்பாடு. அதில் எந்த மாற்றத்தையும் இத்திட்டம் ஏற்படுத்தாது. இவ்வாறு சீன வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
News