2 இந்தியர்களுக்கு ‘பசுமை ஆஸ்கார்’ விருது
Views - 59 Likes - 0 Liked
-
இயற்கை மற்றும் உயிரினங்கள் பாதுகாப்புக்கு அரும்பணி ஆற்றியவர்களை பாராட்டும் வகையில், இங்கிலாந்தை சேர்ந்த ஒயிட்லி நிதியம், ஒயிட்லி விருதுகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இவ்விருது, ‘பசுமை ஆஸ்கார்’ விருது என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இவ்விருதுக்கு இந்தியாவை சேர்ந்த சஞ்சய் குப்பி, பூர்ணிமா பர்மன் உள்பட 6 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் புலிகள் வழித்தடத்தை பாதுகாக்க ஆற்றிய பணிக்காக சஞ்சய் குப்பிக்கும், அசாம் மாநிலத்தில் ஹர்ஜிலா என்ற அரியவகை பறவைகளையும், அவற்றின் வாழிடத்தையும் பாதுகாக்க ஆற்றிய பணிக்காக பூர்ணிமா பர்மனுக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.
இன்று லண்டனில் நடைபெறும் விழாவில், இங்கிலாந்து ராணியின் மகள் இளவரசி ஆனி, இவ்விருதை வழங்குகிறார். விருதுக்கு உரியவர்களுக்கு பரிசுத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்படும்.News