வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்வு
Views - 48 Likes - 0 Liked
-
வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 209 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் குறியீடு 223.98 புள்ளிகளாக சரிந்துள்ளதை அடுத்து, இன்று மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 208.82 புள்ளிகள் உயர்ந்து 30,643.61 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 57.45 புள்ளிகள் அதிகரித்து 9486.90 புள்ளிகளாக உள்ளது.
முக்கிய நிறுவன பங்கீடாளர்களான, ஐடிசி, இந்துஸ்தான் யூனிலிவர், ஐசிஐசிஐ வங்கி, டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோ கார்ப், ஓஎன்ஜிசி, பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் போன்ற பங்குகளும் 4.44% வரை உயர்ந்திருந்தது.
ஆசியாவின் இதர பங்குச்சந்தையான, ஹாங்காங்கின் ஹாங் செங் 0.30%, சீனாவின் ஷாங்காய் கூட்டுக் குறியீடு 0.12% மற்றும் ஜப்பான் நாட்டின் நிக்கேய் 0.19% அதிகரித்து காணப்பட்டது. கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரியாக 0.27% வரை அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.News