நெய் பருப்பு
Rate it
0 Users
Kumarinet
Views - 291 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 5
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்குதாளிக்க:
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – ஒரு பின்ச்செய்முறை:
- பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
- ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும்.
- ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும்.
- பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும்.
- சுவையான நெய் பருப்பு ரெடி.
குறிப்பு:- இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.
- குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை.
- இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
Recipes