வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்
1
Rate it
1 Users
Kumarinet
Views - 84 Likes - 0 Liked
-
வாழைக்காய் 1மஞ்சள் தூள் ஒரு சிட்டிகைமிளகாய்த்தூள் 1/2 டீஸ்பூன்உப்பு தேவையான அளவுஎண்ணெய் 1டேபிள்ஸ்பூன்கடுகு 1டீ ஸ்பூன்பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகைகறிவேப்பிலை சிறிது#அரைப்பதற்கு தேவையானவை...தேங்காய் 2 ஸ்பூன்இஞ்சி அரை இன்ச்பூண்டு 5 பல்மிளகு ஒரு டீஸ்பூன்.#செய்முறை....அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.முதலில் வாழைக்காயின் தோலை நீக்கிவிட்டு அதனை நீளநீளமாக வெட்டிக்கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதனுடன் வாழைக்காயை போட்டு பாதியாக வேக வைத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் வாழைக்காயைப் போட்டு மிளகாய் தூள் மஞ்சள் தூள் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவேண்டும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை பெருங்காயத்தூள் போட்டு தாளித்து பின் பிரட்டி வைத்துள்ள வாழைக்காயை போட்டு மிதமான தீயில் 3 நிமிடம் பிரட்டி அரைத்து வைத்துள்ள பேஸ்ட் உப்பு தூவி நன்கு பிரட்டி விட வேண்டும்.அடுத்து அதில் சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால் சுவையான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் ரெடிRecipes