இஞ்சிதொக்கு
Rate it
0 Users
Kumarinet
Views - 92 Likes - 0 Liked
-
தேவையான பொருள்கள் :
அதிக நார் இல்லாத இஞ்சி - 100 கிராம்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிது
தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கடுகு, தனியா, வெந்தயம் - அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க
செய்முறை :
* இஞ்சியை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.
* புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
* கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடியாக்கிக் கொள்ளவும்.
* நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும்.
* நன்றாக வதங்கியதும் கரைத்து வைத்துள்ள புளிநீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
* நன்கு சுண்டி, எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்த்து கிளறவும்.
* பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது நன்கு கிளறி இறக்கி ஆற விடவும்.
* ஆறியதும் கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.Recipes