ராகி பணியாரம்
Rate it
0 Users
Kumarinet
Views - 62 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
சர்க்கரை - 1 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
பால் - 1 கப்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, சர்க்கரை, சோடா உப்பு, ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேங்காய் மற்றும் பால் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து, 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்பு பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். கல்லானது சூடானதும், அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, பின் கலந்து வைத்துள்ள பணியார மாவை குழியினுள் ஊற்றி, பணியாரங்களாக சுட்டு எடுத்தால், ராகி பணியாரம் ரெடி!!!
Recipes