பிஸ்ஸா
Rate it
0 Users
Kumarinet
Views - 129 Likes - 0 Liked
-
தேவையான பொருட்கள் ;
2 மீடியம் பிஸ்ஸா செய்ய :
மைதா மாவு - இரண்டரை கப் மாவு (டஸ்டிங் சிறிது சேர்த்து)
ஆக்டிவ் ட்ரை இன்ஸ்டண்ட் ஈஸ்ட் - 1 டேபிள்ஸ்பூன்
சீனி- 1 டீஸ்பூன்
உப்பு - அரைடீஸ்பூன்
வெது வெதுப்பான வெந்நீர் -1 கப்
ஆலிவ் ஆயில் - 2-3 டேபிள்ஸ்பூன்
பொதுவாக பிஸ்ஸா சாஸ் செய்ய:
ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பொடியாக நறுக்கியது - 2 பல்
காய்ந்த மிளகாய் பொடித்தது - 1 டீஸ்பூன்
டொமட்டோ பேஸ்ட் அல்லது கெச்சப் - 1 கப்
ஓரிகானோ -அரை - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைப்பட்டால் சிறிது.
சிக்கன் ஃபஜிதா சாஸ் செய்ய:
ஒரு பெரிய தக்காளி,ஒரு வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், மல்லி இலை சிறிது ,ஒரு பல் பூண்டு சேர்த்து வேக வைத்து ஆற வைத்து பேஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
டாப்பிங் செய்ய:சிக்கன் வேக வைத்து உதிர்த்தது அல்லது வெஜ் பிரியர்கள் மஷ்ரூம் ,பேபி கார்ன் உபயோகிக்கலாம்.
ஒரு வெங்காயம் ஸ்லைஸ் செய்தது
ஒரு கொடைமிளகாய் ஸ்லைஸ் செய்தது
ஆலிவ் இருந்தால் அதனையும் சேர்த்துக் கொள்ளலாம்.
துருவிய மொசரல்லா சீஸ் - ஒரு கப் அல்லது தேவைக்கு.
செய்முறை:முதலில் வெது வெதுப்பான நீரில் ஈஸ்ட், சீனி, சேர்த்து ஃபோர்க்கால் கலக்கவும். பத்து நிமிடம் வைக்கவும். இப்படி நுரைத்து வரும். ஒரு பவுலில் மாவு எடுத்துக் கொண்டுநடுவில் குழித்து ,உப்பு , அந்த ஈஸ்ட் கலந்த நீரை சேர்க்கவும். மாவை ஒன்று சேர்த்து நடுவில் எண்ணெய் சேர்த்து மீண்டும் திருப்பி நன்கு உருட்டி வைக்கவும். மூடி போட்டு வெது வெதுப்பான இடத்தில் வைக்கவும். ஒரு மணி நேரத்தில் மாவு பொங்கி இரு மடங்காகிவிடும். அந்த மாவை நடுவில் ஒரு பஞ்ச் கொடுத்து மீண்டும் மெதுவாக குழைக்கவும். திரும்ப உருண்டையாக்கி வைக்கவும்.எண்ணெய் தடவிய பவுலில் வைத்து மூடவும். 10 நிமிடம் கழித்து எடுத்து அதனை மாவு கொண்டு தேய்த்தோ அல்லது எண்ணெய் தடவியோ பிஸ்ஸா பேஸ் வட்டமாக கையால் பரத்தவும்.
வேக வைக்கும் முன்பு விரும்பினால் ஃபோர்க்கால் அங்கங்கு குத்திக் கொள்ளலாம். எலெக்ட்ரிக் ஓவனில் மீடியம் வெப்பநிலையில் வைத்து பேஸ் லேசாக வெந்தவுடன் எடுக்கவும். லேசாக வெந்து வரும் பொழுது எடுத்து ஆற வைத்து எடுத்து ஃப்ரீசரில் வைத்துக் கொள்ளலாம்,இல்லாவிடில் பிஸ்ஸா சாஸ் தடவி,டாப்பிங் செய்து பிஸ்ஸா உடனேயும் செய்து எடுக்கலாம். பிஸ்ஸா சாஸ் தடவவும்.
டாப்பிங் செய்யவும்.
ஒரு நான்ஸ்டிக் பேன் அல்லது பிஸ்ஸா பேன் அல்லது ஸ்டோன் இருந்தால் இருந்தால் அதில் வைக்கலாம். 15 -20 நிமிடம் 200 டிகிரி வெப்பநிலையில் பேக் செய்து எடுக்கவும்.
Recipes