அன்னாசிபழம் ரசம்
Rate it
0 Users
Kumarinet
Views - 111 Likes - 0 Liked
-
தேவையானவை:
அன்னாசிபழ துண்டுகள்- 1/2+1/4 கப்;
தக்காளி-1; புளிக்கரைசல்-1 கப்; ரசப்பொடி-1/2 தேக்கரண்டி ; வேகவைத்த துவரம்பருப்பு-1/2 கப்; மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி; தேங்காய்ப்பால்-1/4 கப்; கொத்தமல்லித்தழை-சிறிது; உப்பு-தேவையான அளவு
தாளிக்க:
நெய்-1 தேக்கரண்டி; கடுகு-1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்-1/4 தேக்கரண்டி; காய்ந்த மிளகாய்-2; கறிவேப்பிலை-சிறிது
செய்முறை:
1/2 கப் அன்னாசிபழத்தை மிக்சியில் அரைத்து சாறு எடுக்கவும். தக்காளியை சிறுதுண்டுகளாக்கி சிறிது நீர் சேர்த்து வாணலியில் வேக வைக்கவும். தக்காளி வெந்ததும், புளிக்கரைசல், உப்பு சேர்த்து வேக வைக்கவும். பின் வேகவைத்த துவரம்பருப்பு, ரசப்பொடி சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பின் அன்னாசிப்பழச் சாறு சேர்த்து இறக்கவும். கடைசியாக தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை தாளித்துக்கொட்டி அதில் மீதமுள்ள அன்னாசிப்பழ துண்டுகள், தேங்காய்ப்பால், கொத்தமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
கோவைக்காய் புளிக்குழம்பு
தேவையானவை:
கோவக்காய்-15 ; வெங்காயம்-2; தக்காளி-1
புளி-கொட்டைப் பாக்களவு; உப்பு-தேவையான அளவு
வறுத்து, அரைக்க:
காய்ந்த மிளகாய்-5; தனியா-1 மேசைக்கரண்டி
அரிசி-1 தேக்கரண்டி; கடலைப்பருப்பு-1 தேக்கரண்டி; சீரகம்-1 தேக்கரண்டி; மிளகு- 1/2 தேக்கரண்டி; தேங்காய்த் துருவல்-1 மேசைக்கரண்டி
பொட்டுக்கடலை-1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்-1 மேசைக்கரண்டி; காய்ந்த மிளகாய்-2
பச்சை மிளகாய்-2; பூண்டு-2 பல்
மல்லித்தழை-சிறிதளவு
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் வறுத்து அரைக்கவேண்டிய பொருள்கள் எல்லாவற்றையும் வறுத்து ஆற வைக்கவும். ஆறியதும் வறுத்த பொருள்களை எல்லாம் விழுதாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களை போட்டு தாளித்து, நறுக்கின வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும். அதில் கோவக்காயைச் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். கோவக்காய் வதங்கியதும் அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி காயை வேக வைக்கவும். காய் பாதி அளவு வெந்ததும் வறுத்து அரைத்த விழுதை சேர்த்து நன்கு கொதிக்கவிட்ட பிறகு கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை வடிகட்டி ஊற்றவும். தேவைக்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். நன்றாக கொதித்து குழம்பு பதத்திற்கு கெட்டியாகும்போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Recipes