தேவையான பொருள்கள் :
- முள்ளங்கி - 1/2 கிலோ
- துவரம் பருப்பு - 1 கப்
- பாசிப்பருப்பு - 1/4 கப்
- புளி தண்ணீர் - 1/2 கப்
- சாம்பார் தூள் - 3 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 5
- தக்காளி - 2
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை - 1 ஆர்க்கு
- பெருங்காயத் தூள் - தேவைக்கேற்ப
- எண்ணெய் - தேவைக்கேற்ப
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
முள்ளங்கியை வட்டமாக வெட்டி பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு ஓரங்கள் நிறம் மாறும் வரை வதக்கவும்.
குக்கரில் பருப்புகள், சிறிது சீரகம், தக்காளி 2 1/2 கப் நீர் சேர்த்து 4 விசில் வைக்கவும். (அவரவர் குக்கரை பொறுத்து வைக்கவும்)
வதக்கிய முள்ளங்கியில் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். அடுத்து தூள் வகைகளை சேர்த்து கொதித்ததும், புளித்தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். வேக வைத்த பருப்பை முள்ளங்கியுடன் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் பெருங்காயத்தூள் சேர்க்கவும். தாளித்ததை சாம்பாரில் கொட்டி கலக்கி விடவும்.
சுவையான முள்ளங்கி சாம்பார் ரெடி. சாதம், இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்.

Kumarinet