- தினம் நெல்லிக்காயை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் இளமையாக இருக்க உதவும் டானிக்காக பயன்படும். தொற்று நோய்கள் வரவிடாமல் தடுக்கும். இருதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை பலப்படுத்தும்.
- நெல்லிக்காயில் வைட்டமின் சி சத்து உள்ளது ( ஒரு நெல்லிக் காயில் முப்பது ஆரஞ்சுப் பழங்களிலுள்ள வைட்டமின் சி சத்து உள்ளது).
- புத்தியை வளர்க்கும் பாஸ்பரஸ் சத்து அதிகமாக நெல்லிக்காயிலுள்ளது.
- நெல்லிக்காயில் மாவுச் சத்து-14 கி, புரத சத்து-0.4 கி, கொழுப்புச்சத்து- 0.5 கி, பாஸ்பரஸ்- 21 மி.கி, கால்ஷியம்-15 மி.கி, இரும்புச்சத்து – 1 மி.கி, வைட்டமின் பி1 28 மி.கி, வைட்டமின் சி 720, மி.கி, நியாசின் – 0,4 மி.கி, கலோரிகள் – 60 ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது.
இத்தகைய மருத்துவக் குணங்கள் நிறைந்த நெல்லிக்காயை அடிஅடிக்கடிச் சாப்பிட்டு வந்தால் நோயின்றி சிறப்பாக வாழலாம்.

Kumarinet